பெண்கள் பிரிமீயர் லீக் - மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் மும்பையில் நடைபெற்றது. 5 அணிகள் கலந்து கொண்டன.
இந்த தொடரின் இறுதி போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி 131 ரன்களே எடுத்தது.
மும்பை அணியில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஐஸி வாங்கும் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
மும்பை அணியில் அமெலியா கெர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து ஆடிய மும்பை அணியில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அரைசதம் அடித்தார்.
இறுதில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதிக ரன் அடிதவருக்கான ஆரஞ்சு நிற தொப்பி டெல்லி கேப்டன் மெக் லானிங்குக்கு வழங்கப்பட்டது.
அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா நிற தொப்பி ஹெய்லி மேத்யூஸூக்கு வழங்கப்பட்டது.
கேட்ச் ஆப் த சீசனுக்கான விருதை ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றார்.
இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை யாஸ்திகா பாட்டியா வென்றார்.
மும்பை அணியின் உரிமையாளர் நிதா அம்பானியுடன் வீராங்கனைகள்.