உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்கள், விரும்பிகள் வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும்.
பல்வேறு விதங்களில், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்கள், நமது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை காலத்துக்கும் நினைவில் இருக்கும்படி பதிவு செய்கின்றன.
புகைப்படங்கள் நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன.