உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா சாம்பியன்...!!!
Twitter : @ICC
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடந்தது.
Twitter : @ICC
'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
அதிகபட்சமாக ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 2வது நாள் முடிவிலேயே 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனாலும் ரஹானே(89 ரன்கள்) நிலைத்து நின்று ஆடி சிறிது நம்பிக்கை அளித்தார்.
அதன்பின் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் கவனமாக ஆடினர்.
இருப்பினும் போலண்ட், தான் வீசிய ஒரு ஒவரில் கோலி மற்றும் ஜடேஜா விக்கெட்டுக்களை எடுத்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.