தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை தெரிந்து கொள்ளலாம்..

கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதிக்கும் காட்சியை நீங்கள் காணக்கூடிய இந்தியாவின் ஒரே தலம்
குற்றாலம்
பருவகாலத்தைப் பொருட்படுத்தாமல், தாராளமாக ஓடும் குற்றால அருவியின் தண்ணீருக்கு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
மதுரை
பிரமாதமான கட்டமைப்புகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற தூங்காநகரம் மதுரை
தனூஷ்கோடி
ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள இருபுறமும் கடல் கொண்ட அழகான மீனவ நகரம்.
கொல்லிமலை
பிரமிப்பான பயண அனுபவமும் ஆண்டு முழுவதும் இதமான காலநிலையும் கொண்டுள்ள மலைப்பிரதேசம்
ராமேஸ்வரம்
இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்
நீலகிரி
இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டி
சோலையாறு அணை
சோலைக் காடுகள் மத்தியில் கட்டப்பட்ட இந்த அணை ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை ஆகும்.
தஞ்சாவூர்
தமிழகத்தின், தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக காலத்தை வென்று உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான கலைப்படைப்புகளில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
வால்பாறை
அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விலகி ஒரு அமைதியான மறக்கமுடியாத நேரத்தை செலவிட விரும்புவோருக்கு இறுதி தேர்வாகும் ஒரு மலைப்பாங்கான குக்கிராமம்,
வேடந்தாங்கல்
இந்தியாவின் பெரிய நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.
கோடியக்கரை
கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. இங்கு அமைந்துள்ள வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.