வீட்டிலேயே சுவையான தேன் மிட்டாய்..வாங்க பாக்கலாம்..!

வீட்டிலேயே சுவையான தேன் மிட்டாய்..வாங்க பாக்கலாம்..!

Published on
2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு மாவாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/4 டீஸ்பூன் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி பொறித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
அது நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள். இப்பொழுது நமது சுவையான தேன் மிட்டாய் ரெடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com