சுவை மிகுந்த நெல்லிக்காய் ஜாம் இப்போது வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Photo: MetaAI
வைட்டமின் சி, இரும்புச்சத்து, தாகம் தீர்க்க ஏலக்காய், நாவுக்கு மிகுந்த சுவை என ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவையான நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
Photo: MetaAI
தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் - 300 கிராம், வெல்லம் - 400 கிராம், ஏலக்காய் -5 (பொடித்துக் கொள்ளவும்), தேன் – தேவையான அளவு
Photo: MetaAI
செய்முறை: நெல்லிக்காய்களை கழுவி இட்லித் தட்டில் வைத்து இட்லி வேகவைப்பதைப் போன்று வேக வைக்கவேண்டும்.
Photo: MetaAI
ஆறியதும் விதைகளை நீக்கி மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
Photo: MetaAI
வாணலியில் வெல்லத்தைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டுப் பாகு தயாரிக்கவும்.
Photo: MetaAI
பாகு கொதிக்கும்போது நெல்லி விழுது,ஏலக்காயைச் சேர்த்து சீராகக் கிளறி, நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும்
Photo: MetaAI
பின்னர் இதனுடன் இனிப்புக்கு தேவையான அளவு தேன் சேர்த்து கலந்துவிட சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி.