மும்பை: சித்தி விநாயகர் கோவிலில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா சாமி தரிசனம்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
மும்பை: சித்தி விநாயகர் கோவிலில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா சாமி தரிசனம்
Published on

மும்பை,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா தனது தாயுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வரும் அபிஷேக் சர்மா 8 ஆட்டங்களில் 380 ரன்கள் குவித்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com