ஆஷஸ் டெஸ்ட் தொடர்: முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்.. இங்கிலாந்துக்கு பின்னடைவு

image courtesy:ICC
இந்த தொடரில் இங்கிலாந்து 0-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
லண்டன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி அடிலெய்டில் வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற எஞ்சிய போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே இவர் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக 2-வது போட்டியில் இடம்பெறவில்லை. ஏற்கனவே தோல்விகளால் துவண்டு போயுள்ள இங்கிலாந்து அணிக்கு இவரது விலகல் பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது. இவருக்கு மாற்று வீரராக மேத்யூ பிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.






