சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்


சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
x

image courtesy: AFP

தினத்தந்தி 14 Feb 2025 3:00 PM IST (Updated: 14 Feb 2025 3:02 PM IST)
t-max-icont-min-icon

இவருக்கு பதிலாக ஜேக்கப் டபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெலிங்டன்,

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சீயர்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின்போது தொடை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குணமடைய குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story