தோனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு: அஸ்வின்

காயம் காரணமாக,தோனி போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தோனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு: அஸ்வின்
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை அணி 10 போட்டிகளில் 5 வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயம் (Calf Injury) காரணமாக,தோனி கடந்த மூன்று வாரங்களாகப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தோனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி திரும்பினால், அணியின் கலவையில் ம றம் ஏற்படும். அது மிகவும் கடினமாகி விடும். எனவே டோனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஒரு வேளை அடுத்த ஆட்டங்களில் சென்னை அணி தோற்று பிளே-ஆப் வாய்ப்பை இழந்தால் டோனிக்கு பிரிவுபசார போட்டி வாய்ப்பு கிடைக்கலாம்' என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com