முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
கட்டாக்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் பெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், லூத்தோ சிபம்லா, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே






