முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
Published on

லார்ட்ஸ்.

இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.கைல் ஜேமிசன் 38 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 264 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால்நியூசிலாந்து அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com