ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய ஜூனியர் அணி அறிவிப்பு

கோப்புப்படம்
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் அக்.11-ந் தேதி இங்கிலாந்தையும், 12-ந் தேதி நியூசிலாந்தையும், 14-ந் தேதி பாகிஸ்தானையும், 15-ந் தேதி ஆஸ்திரேலியாவைவும், 17-ந் தேதி மலேசியாவையும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பின்கள வீரர் ரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங்
பின்களம்: ரோகித், தாலிம் பிரியோபார்தா, அன்மோல் எக்கா, அமிர் அலி, சுனில், ரவ்னீத் சிங்
நடுகளம்: அங்கித் பால், தவ்னாஜம் இங்கல்பா லுவாங், அட்ரோகித் எக்கா, அரைஜீத் சிங் ஹூன்டால், ரோசன் குஜூர், மன்மீத் சிங்
முன்களம்: அர்ஷ்தீப் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாஹா, அஜீத் யாதவ், குர்ஜோத் சிங்.






