ஜுரேல், பராக் அரைசதம்.. டெல்லிக்கு 194 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஜுரேல், பராக் அரைசதம்.. டெல்லிக்கு 194 ரன்கள் இலக்கு
Published on

டெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜுரேல் - சூர்யவன்ஷி இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பராக் அதிரடி காட்டினார். அரைசதமடித்த பராக், 51 ரன்னிலும், ஜுரேல் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி தரப்பில் ஸ்டார் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com