ஐபிஎல்: ஐதராபாத் - பெங்களூரு இன்று மோதல்

ஐதரபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஐபிஎல்: ஐதராபாத் - பெங்களூரு இன்று மோதல்
Published on

ஐதராபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ஐதரபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பெங்களூரு அந்த இடத்தை தக்கவைக்கவும், 3வது இடத்தில் உள்ள ஐதராபாத் புள்ளிப்பட்டியலில் முன்னேற ஐதராபாத் அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com