ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
x

image courtesy: @ZimCricketv

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது.

ஹராரே,

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 37 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சில் 359 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் (121 ரன்) சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிபி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணியினர், ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் 43 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்சில் 159 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 73 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே கைப்பற்றி அசத்தியது.

1 More update

Next Story