பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி 301 ரன்கள் குவிப்பு

நஜ்முல் ஹொசைன் நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி 301 ரன்கள் குவிப்பு
Published on

மிர்பூர்,

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்கத்தில் ஹசன் ஜாய் 8 ரன்கள், சதாம் இஸ்லாம் 13 ரன்களும் எடுத்தனர். பின்னர் மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் இருவரும் சிறப்பாகி விளையாடி ரன்கள் குவித்தனர். நஜ்முல் ஹொசைன் நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.மொமினுல் ஹக் 91 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிரு வங்காளதேச அணி 301 ரன்கள் எடுத்தது.முஷ்பிகுர் ரஹீம் 48 ரன்களும், லிட்டன் தாஸ் 8 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com