

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு டல்லாஸ் நகரில் நடந்த 'ஜெ' பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரியாவுடன் மோதியது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத் தில் 8-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி பந்தை கம்பத்திற்கு வெளியே அடித்து வீணாக்கினார்.
உலகக் கோப்பையில் அவர் பெனால்டியை தவற விடு வது இது 3-வது முறையாகும். இதற்கு சிறிது நேரத்தில் அவர் பரிகாரம் தேடிக் கொண்டார். 38-வது நிமிடத்தில் சக வீரர் மெடினாவிடம் இருந்து வந்த பந்தை மெஸ்சி லாவகமாக வலைக்குள் செலுத்தி அசத்தினார்.
மேலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் மெஸ்சியின் கோல் எண்ணிக்கை 17-ஆக (28 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மிராஸ்லாவ் குளோசின் (16 கோல்) சாதனையை மெஸ்சி முறியடித்து புதிய அத்தியாயம் படைத்தார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஆறாவது போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் பிற்பாதியில் கடைசி நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் போட்டு உலகக் கோப்பையில் தனது கோல் எண்ணிக்கை 18-ஆக உயர்த்தினார். நடப்பு தொடரில் அவரது 5-வது கோலாகும்.
முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை சாய்த்து 2-வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.