பிரான்ஸ் வீரர் எம்பாப்பே-வை இனரீதியாக விமர்சித்த பராகுவே பெண் எம்.பி - வலுக்கும் எதிர்ப்பு

பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றிபெற்றது
பிரான்ஸ் வீரர் எம்பாப்பே-வை இனரீதியாக விமர்சித்த பராகுவே பெண் எம்.பி - வலுக்கும் எதிர்ப்பு
Published on

அசன்கொயின்,

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கடந்த 5ம் தேதி நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் - பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றிபெற்றது. பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்வே ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

பிரான்சுக்கு எதிரான தோல்வியின் மூலம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த பராகுவே உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இனரீதியில் விமர்சனம்

இந்நிலையில், பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்வே-வை பராகுவே பெண் எம்.பி. செலிஸ்டி அம்ரிலா இனரீதியாக விமர்சனம் செய்துள்ளார். எம்பாப்வே உண்மையான பிரெஞ்சுக்கார் இல்லை, அவர் காலனிய கேமரூன் நாட்டை சேர்ந்தவர். ஆனால், அவர் பிரெஞ்சுக்காரர் போல் தோற்றமளிக்க முயற்சிக்கிறார்.

எம்பாப்வே பொறாமை கொண்வர், புதிதாக பணக்காரர், கர்வமுள்ளவர், அசிங்கமானவர் என்று இனரீதியில் விமர்சனம் செய்துள்ளார்.

எம்.பி. செலிஸ்டி அம்ரிலாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செலிஸ்டியின் கருத்து அவரின் சொந்த கருத்து என்றும் இது அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் பராகுவே அரசு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com