100 மீட்டர் ஓட்டம்: 10.09 வினாடிகளில் கடந்து குரிந்தர்வீர்சிங் தேசிய சாதனை

100 மீட்டர் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டம்: 10.09 வினாடிகளில் கடந்து குரிந்தர்வீர்சிங் தேசிய சாதனை
Published on

ராஞ்சி,

பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார் கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குரிந்தர்வீர்சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் 100 மீட்டர் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து, புதிய தேசிய சாதனையை குரிந்தர்வீர் சிங் படைத்துள்ளார். அத்துடன், 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com