சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் தோல்வி

எச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவ் உடன் மோதினார்.
சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் தோல்வி
Published on

ஷாங்காய்,

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com