காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்

இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்
Published on

கிளாஸ்கோ,

காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன், 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com