பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது

இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது
Published on

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக் கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரை நடக்கிறது.

களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.684 கோடியாகும். கடந்த ஆண்டை விட 9.53 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.31 கோடியும், 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.15% கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.6% கோடி பரிசாக கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com