இந்திய கோல்ப் வீரர் விஜய்குமார் காலமானார்

தனது சொந்த ஊரான லக்னோவில் காலமானார்.
இந்திய கோல்ப் வீரர் விஜய்குமார் காலமானார்
Published on

புதுடெல்லி,

மூத்த இந்திய கோல்ப் வீரர் விஜய்குமார், தனது சொந்த ஊரான லக்னோவில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. 2002 இந்தியன் ஓபன் வெற்றியாளரும், நான்கு முறை ஆர்டர் ஆப் மெரிட் சாம்பியனுமான விஜய்குமார், புகழ்பெற்ற ஒருவராகத் திகழ்ந்தார்.

2002 இந்தியன் ஓபனில் விஜய்குமார் பெற்ற வெற்றி, இந்திய கோல்ப் வரலாற்றில் ஒரு மைல்கல் தருணமாக விளங்குகிறது. விஜய்குமார் பல தலைமுறை கோல்ப் வீரர்களுக்கு உத்வேகம் அளித்ததுடன், நாட்டில் இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com