உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

ஸ்பெயினின் கிரனடாவில் நடந்து வருகிறது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்
Published on

மாட்ரிட்,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினின் கிரனடாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் சைன்யம் 5-வது இடமும், பலாக் 7-வது இடமும் பெற்றனர். ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட் டியில் இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 23-வது இடமும், அங்குர் கோயல் 29-வது இடமும், நீரஜ் குமார் 40-வது இடமும் பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com