சுவிஸ் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் வெற்றி

கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெருவின் இக்னசியோ பியூஸ் உடன் மோதினார்.
சுவிஸ் ஓபன் டென்னிஸ்:   சிட்சிபாஸ் வெற்றி
Published on

சென்னை,

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெருவின் இக்னசியோ பியூஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாகி விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவின் ஜூவான் மேனுவல் செக் குடியரசின் செனக் கோலாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com