

மும்பை,
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது .
இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.