சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன், 294 ரன்களை எடுத்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் நேரம் இருப்பதானால், இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com