கார்களின் உறுதித்தன்மை சோதனை


கார்களின் உறுதித்தன்மை சோதனை
x

கார்களில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது எந்த அளவு சாத்தியம் என்பதை அறிவதற்காக `கிராஷ் டெஸ்ட்' எனப்படும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கார்களின் உறுதித்தன்மை பல்வேறு கட்டங்களாக சோதிக்கப்படுகின்றன. சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தின் (குளோபல் என்.சி.ஏ.பி.) கீழ் இந்தியாவில் தயாராகும் கார்கள் சோதிக்கப்பட்டன. விபத்து நடந்தால், கார்களில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது எந்த அளவு சாத்தியம் என்பதை அறிவதற்காக இத்தகைய `கிராஷ் டெஸ்ட்' எனப்படும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த சில மாடல் கார்கள் விபத்துக்குள்ளானால் பெரியவர்கள் தப்புவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்தன.

மற்றொரு மாடல் காரில் குழந்தைகள் பாதுகாப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தக் காரில் பயணிக்கும் பெரியவருக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சோதனை முடிவுகள் தெரிவித்தன. இந்த சோதனை அனைத்துமே ஒரு விபத்து நடந்தபிறகு காரின் வெளிப்புற அமைப்பு எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பதை சோதிப்பதற்கு நடத்தப்பட்டவை. பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்த்துவிட்டு கார் தயாரிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் இந்த கிராஷ் டெஸ்டில் தேர்வு பெறும் அளவில் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும். குளோபல் நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அம்சங்களுக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள்படி தாங்கள் வாகனங்களைத் தயாரிப்பதாக அனைத்து நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இதுபோன்ற சோதனைகள், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேகமான 45 கி.மீ. வேகத்தில் நடத்தப்படும். ஆனால் குளோபல் என்.சி.ஏ.பி. சோதனை அதிக வேகத்தில் நடத்தப்பட்டதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் இதில் மேலும் கவனம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. அதே போல உயிர் காக்கும் ஏர் பேக் அனைத்து கார்களிலும் கட்டாயமாக்கப்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். புனே நகரில் செயல்படும் ஆட்டோமோடிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா (ஏ.ஆர்.ஏ.ஐ.) இத்தகைய சோதனையை நடத்த பரிந்துரைத்துள்ளது. இந்த சோதனை 64 கி.மீ. வேகத்தில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.


Next Story