வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் கலைஞர்காலனியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 24). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 2 நாட்களுக்கு முன்பு மதியழகன் திருச்சி பீமநகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு மீண்டும் தோள்பட்டையில் வலி அதிகமானதால் மனமுடைந்தார். இதையடுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com