இன்றைய ராசிபலன் - 06.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan - 06.09.2024
Published on

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 21ம்- தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 09.18 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி : இன்று பிற்பகல் 01-47 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம் : அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் மாலை : 3.00 - 4.30

குளிகை காலை : 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை : 12.15 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : சதயம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் கனவு நனவாகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போட வேண்டாம். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்- மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் இருந்தும் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கடகம்

தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர். சற்று தங்களுடைய உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

துலாம்

தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து நன்மைகளும் தங்களுக்கு உண்டாகும். பெண்களின் சேமிப்பு உயரும். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை கூடுமானவரை ஓட்டல் சாப்பாட்டை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

விருச்சிகம்

உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முற்படுவார்கள். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

திடீர் பணவரவு உண்டு. ஆன்மீகப் பணிகள் சிறக்கும். காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கும்பம்

சதயம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும். தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com