

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரி ரமேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருவண்ணாமலை ரோட்டில் ஒரு டிராக்டரில் மணல் ஏற்றி வந்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரி, டிராக்டரையும், அதில் வந்த 2 பரையும் பிடித்து நகர் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.