திருச்சியில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது

திருச்சியில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது
திருச்சியில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது
Published on

பொன்மலைப்பட்டி, ஆக.31 -
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 45) அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பஸ்நிலையம் செல்லும் பஸ்சில் பணியாற்றினார். இந்த பஸ் அரியமங்கலம் மேம்பாலம் அருகே வந்த போது, மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (22) என்பவர் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்ததாக தெரிகிறது. அவரை நடத்துனர் பஸ்சின் மேலே ஏறி வரும்படி கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் ராமசாமியை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com