2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
Published on

திருமயம், ஜூன்.19-
திருமயம் அருகே பகவான்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு (வயது 36). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஒருமகன் உள்ளான். இந்நிலையில் முத்தழகு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியதுடன், தனக்கு அவரை 2-ம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கணவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து முத்தழகு அந்த பெண்ணுடன் தலைமறைவானார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com