பணம்-செல்போன் திருடிய வாலிபர் கைது

பணம்-செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பணம்-செல்போன் திருடிய வாலிபர் கைது
Published on

பணம்-செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செல்போன் திருட்டு
திருச்சி, கே.கே.நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டமான் காலனியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 69). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் படுக்கை அறையில் வைத்திருந்த செல்போன், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் க.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில்திருட்டில்ஈடுபட்டதுதிருச்சி,எடமலைப்பட்டிபுதூர், இந்திரா நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் என்கிற பல்லு கார்த்தி (21) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
*சிறுகனூர் அருகே உள்ள எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கதிரவன் (வயது 30). இவர் சமயபுரம் அருகே அக்கரைபட்டியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணிக்காக வீட்டிலிருந்து சிமெண்ட் ஆலைக்குசென்று கொண்டிருந்தார். எதுமலை காட்டுப் பகுதி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com