இன்றைய ராசிபலன்


இன்றைய ராசிபலன்
x
தினத்தந்தி 1 May 2024 12:40 AM GMT (Updated: 2 May 2024 7:24 AM GMT)

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந்தேதி புதன்கிழமை.

நட்சத்திரம்: அதிகாலை 1.42 வரை உத்திராடம், பின்பு திருவோணம்

திதி: அதிகாலை 3.10 வரை சப்தமி, பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம், மரண யோகம்

நல்ல நேரம்: காலை 9.30 - 10.30, மாலை 4.30 - 5.30

ராகு காலம்: பிற்பகல் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிடம்

மேஷம்

வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பணவரவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உண்மையாக இருப்பர். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

தேக ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு. மாணவர்கள் விடுமுறையை உறவினர் வீட்டில் கழிப்பர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். பெண் உத்யோகஸ்தர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


Next Story