நினைத்த காரியம் நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - 01.11.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
Today Rasi Palan in Tamil - 01.11.2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

நவம்பர் 1

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 15

ஆங்கில தேதி: 1

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-47 வரை சதயம் பின்பு பூரட்டாதி.

திதி: இன்று அதிகாலை 04-31 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.45 - 8.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 9-00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 3.00

குளிகை காலை: 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

மேஷம்

வர வேண்டிய பணம் வசூலாகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். திருமணம் கோலாகரமாக நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தொலைபேசி மூலமாக அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவர். பிள்ளைகள் உதவுவர். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். பண வரவு தாமதப்படும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

காத்திருந்த விசா தங்களுக்கு கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

காதலர்கள் மீண்டும் இணைவர். உணவு விசயத்தில் கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவுவர். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

குடும்பத்தலைவிகள் சிக்கனத்தை கடைபிடிப்பர். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். உடல் நலம் சுகம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

தனுசு

தேவையில்லாத மனபயம் விலகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

நல்ல வரண் அமையும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

நடைபாதை வியாபாரிகள் செழிப்பர். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பயணங்களால் ஆதாயம் உண்டு. தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com