இன்றைய ராசிபலன் - 13.05.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் - 13.05.2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

மே 13

கிழமை செவ்வாய் கிழமை

தமிழ் வருடம் விசுவாவசு

தமிழ் மாதம் சித்திரை

நாள் 30

ஆங்கில தேதி13

ஆங்கில மாதம் மே

வருடம்2025

நட்சத்திரம்இன்று காலை 09-19 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி இன்று முழுவதும் பிரதமை

யோகம் மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை 7-30 to 08-30

நல்ல நேரம் மாலை 4-30 to 5-30

ராகு காலம் மாலை 03-00 to 04-30

எமகண்டம் காலை 09-00 to 10-30

குளிகை மாலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம் காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம் மாலை 7-30 to 8-30

சூலம் வடக்கு

சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி

ராசிபலன்:-

மேஷம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

ரிஷபம்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கடகம்

மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

சிம்மம்

தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கன்னி

வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

துலாம்

வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். பணவரவில் தாமதம் இல்லை. வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

விருச்சிகம்

பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

தனுசு

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

தாயாரின் உடல் நலம் சீராகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கும்பம்

செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம் பொன்வண்ணம்

மீனம்

அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.காதலர்களுக்குள் வாக்குவாதம் வந்து செல்லும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com