இன்றைய ராசிபலன் - 16.03.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் - 16.03.2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் பங்குனி மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 11.27 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று மாலை 04.35 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 7.30 - 8.30, மாலை 3.30 - 4.30

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டம்: சதயம், பூரட்டாதி

ராசிபலன்:

மேஷம்

பெண்களுக்கு உஷ்ண பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த பொருட்களை உட்கொள்ளுதல் நன்மை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

சகோதர, சகோதரி வழியில் மனஸ்தாபம் ஏற்படும். கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது. தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்கும். விரும்பிய வரனை கைப்பிடிப்பீர்கள். தங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல் பொலிவினைக் கூட்டும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். பல்வலி வந்து போகும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும். வழக்கு சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

திருமணம் மற்றும் கிரகபிரவேசத்திற்கு அழைப்பு வரும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் இருந்து நல்ல வரன் கிட்டும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த லாபத்திற்கு மேல் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். செலவு கூடும். சிக்கனம் தேவை. புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரிகளுக்கு முதல் போடுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

விருச்சிகம்

வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

பக்கத்துவீட்டாரிடம் அனுசரனையாக செல்லவும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். தம்பதிகளிடம் அன்யோன்யம் மிகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். உடல் நலம் சிறக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். கடன் தொல்லை தீரும். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். உங்கள் துணை தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மீனம்

நினைத்த காரியம் கைகூடும். தொலைந்த பொருள் கைக்கு கிடைக்கும். எதிர்பார்த்த ஒன்று நடந்துவிடும். விற்பனையாளர்கள் தங்கள் இலக்கை எட்டுவர். தம்பதிகளிடையே அன்பு கூடும். வெளியூர் பயணம் உண்டு. உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com