வெளியானது விடாமுயற்சி படத்தின் 3-வது பாடல்

இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரவுள்ளது.
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' மற்றும் 2வது பாடலான , 'பத்திக்கிச்சி' வெளியாகி வைரலாகின. இந்நிலையில், 3-வது பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'தனியே' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com