'ஜெயிலர் 2' படத்தில் இணையும் நடிகர் பாலையா!

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் பாலையா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
'ஜெயிலர் 2' படத்தில் இணையும் நடிகர் பாலையா!
Published on

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் முதல் பாகத்தை போல மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவை மற்றும் கேரளாவில் நடைப்பெற்றது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com