'காதல் கோட்டை' இயக்குநர் அகத்தியனின் பூர்வீக வீட்டிற்கு சென்ற நடிகை தேவயானி

இயக்குநர் அகத்தியனின் சகோதரியை நடிகை தேவயானி சந்தித்து நலம் விசாரித்தார்.
'காதல் கோட்டை' இயக்குநர் அகத்தியனின் பூர்வீக வீட்டிற்கு சென்ற நடிகை தேவயானி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் புதிய உணவகத்தின் திறப்பு விழாவில் நடிகை தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்த அவர், உணவக உரிமையாளருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, தனது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமாக விளங்கும் 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி என்பதை அறிந்து தேவயானி வியப்படைந்தார்.

இயக்குநர் அகத்தியன் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவருடைய பூர்விக வீடு எங்கே இருக்கிறது என விசாரித்து அங்கு நடிகை தேவயானி நேரில் சென்றார். அங்கு இயக்குநர் அகத்தியனின் சகோதரியை சந்தித்து தேவயானி நலம் விசாரித்தார்.

இதுகுறித்து இயக்குநர் அகத்தியனிடம் தொலைபேசியில் செய்தியாளர்கள் கேட்டபோது, சினிமாவில் நன்றி மறவாத நடிகைகளில் தேவயானியும் ஒருவர் என்றும், தேவயானி தனது மகளைப் போன்றவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com