சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக மதராஸி வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் "பராசக்தி" என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com