கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்து ; நடிகர் அஜித் காயமின்றி தப்பினார்

துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்து ; நடிகர் அஜித் காயமின்றி தப்பினார்
Published on

துபாய்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார். இந்த கார் ரேஸ் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது, அவர் ஓட்டிக் கொண்டிருந்த கார் ரேஸ் டிராக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com