''துருவ நட்சத்திரம்'' படம் சரியான நேரத்தில் வெளியாகும் - சிம்ரன்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'.
'Dhruva Natchathiram' will release on Right time - Simran
Published on

சென்னை,

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று சிம்ரன் கூறி இருக்கிறார்.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரிதுவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், ரீத்து வர்மாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை சிம்ரன் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,

''துருவ நட்சத்திரம் ஒரு முழுமையான ஆக்ஷன் படம். ஸ்டைலான படமும் கூட. அந்தப் படத்தின் ரிலீஸுக்காக நாங்களும் காத்திருக்கிறோம். படம் நிச்சயமாக சரியான நேரத்தில் வெளியாகும். மக்கள் நிச்சயமாக படத்தை விரும்புவார்கள்'' என்றார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com