இயக்குனர் ராமின் "பறந்து போ" டீசர் நாளை வெளியீடு

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் ராமின் "பறந்து போ" டீசர் நாளை வெளியீடு
Published on

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

'பறந்து போ' படத்தில் இடம்பெற்றுள்ள "சன் பிளவர்" பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

இந்நிலையில், மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com