இந்தி தெரியாது… "குபேரா" பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தி தெரியாது… "குபேரா" பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்
Published on

மும்பை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் குபேரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. தொப்பாளினி தனுஷை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். உடனே அவர் மைக்கை வாங்கி, எல்லாருக்கும் வணக்கம் என தமிழில் பேச தொடங்கிய அவர், "எனக்கு இந்தி தெரியாது, நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன், அதுவும் கொஞ்சம் தான் தெரியும்" என கூற, கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com