ரியோ நடிக்கும் `ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
ரியோ நடிக்கும் `ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

சென்னை,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். மேலும், "ஜோ, ஸ்வீட் ஹார்ட்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் 'ஆண்பாவம் பொல்லாதது' என்ற படத்தில் நடித்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 9-ந் தேதி (நாளை) "ஜோடி பொருத்தம்" என்ற பாடல் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com