'குட் பேட் அக்லி' படம் குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்

18 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.
'குட் பேட் அக்லி' படம் குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்
Published on

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 28-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'குட் பேட் அக்லி' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "குட் பேட் அக்லி படத்தின் டீசர் பெரிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அஜித் சாரின் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் உள்ளனர். 18 வருடங்கள் இடைவெளிக்கு மீண்டும் அஜித் சாருடன் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தின் டீசரை முடிந்த அளவு சிறப்பாக கொடுத்துள்ளார். இதனால் படத்தின் மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com