விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் நீளம் இவ்வளவா ?

ஜனநாயகன் திரைப்படத்தின் நீளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் நீளம் இவ்வளவா ?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. ஜனவரி 9ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற டிசம்பர் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் நீளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோவையும் (16 நிமிடங்கள்) படக்குழு இணைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com